தமிழ்முரசம் பிறந்தநாள் தலைவன் வழியில் நிமிர்ந்தநாள்!

You are currently viewing தமிழ்முரசம் பிறந்தநாள் தலைவன் வழியில் நிமிர்ந்தநாள்!
தமிழ்முரசம் பிறந்தநாள் தலைவன் வழியில் நிமிர்ந்தநாள்! 1
தமிழ்முரசம் பிறந்தநாள் தலைவன் வழியில் நிமிர்ந்தநாள்! 2

தமிழ்முரசம் பிறந்தநாள் தலைவன் வழியில் நிமிர்ந்தநாள் கடந்த 17.02.1997 அன்று நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவால் உருவாக்கப்பட்ட தமிழ்முரசம் வனொலியானது எந்த நோக்கத்திற்காக செயற்படத்தொடங்கியதோ அதிலிருந்து சற்றும் பிறழாது அறத்தின் குரலாக ஓங்கி ஒலித்து வருகின்றது. 25 ஆண்டுகளாக ஒரு வனொலியால் நிலைக்க முடிகின்றது என்றால் அதற்கு முழுக்க முழுக்க தங்கள் பொன்னான நேரங்களை வேதனமின்றி விடுதலைக்காக அற்பணிக்கின்ற பணியாளர்களே காரணம் அத்தோடு தோளோடு தோள் நிற்கும் எமது நேயர்களும் உணர்வாளர்களும் வியாபார நிறுவனங்களும் மிக முக்கியமான காரணமாகின்றனர், அனைவரையும் இன்நேரத்தல் தமிழ்முரசம் உணர்வுக்கரங்களால் தழுவிக்கொள்கின்றது.

தமிழ்முரசம் பிறந்தநாள் தலைவன் வழியில் நிமிர்ந்தநாள்! 3

தமிழ்முரசம் பிறந்தநாள் தலைவன் வழியில் நிமிர்ந்தநாள்-வாழ்த்து-1 – YouTube

தமிழ்முரசம் பிறந்தநாள் தலைவன் வழியில் நிமிர்ந்தநாள்- வாழ்த்து-2 #Singer S.N.surender – YouTube

தமிழ்முரசம் பிறந்தநாள் தலைவன் வழியில் நிமிர்ந்தநாள்-சின்னத்திரை கலைஞர் யெயச்சந்திரன் – YouTube

தமிழ்முரசத்தின் பிறந்தநாள் தலைவன் வழியில் நிமிர்ந்தநாள்- ஊடகவியலாளர் சிவதர்வினி பிரபாகரன் – YouTube

தமிழ்முரசம் பிறந்தநாள் தலைவன் வழியில் நிமிர்ந்தநாள்- இசையமைப்பாளர் சதீஸ் – YouTube

தமிழ்முரசம் பிறந்தநாள் தலைவன் வழியில் நிமிர்ந்தநாள்- மனிதநேயச்செயற்பாட்டாளர்-ராஜ்குமார் – YouTube

தமிழ்முரசம் பிறந்தநாள் தலைவன் வழியில் நிமிர்ந்தநாள்- பின்னணிப்பாடகர்-அனந்து – YouTube

தமிழ்முரசம் பிறந்தநாள் தலைவன் வழியில் நிமிர்ந்தநாள்- ஊடகவியலாளர் கோபி இரத்தினம் – YouTube

தமிழ்முரசம் பிறந்தநாள் தலைவன் வழியில் நிமிர்ந்தநாள்- பின்னணிப்பாடகர் பிரசன்னா – YouTube

தமிழ்முரசம் பிறந்தநாள் தலைவன் வழியில் நிமிர்ந்தநாள்-சின்னத்திரை கலைஞர்.சுட்டி அரவிந் – YouTube

தமிழ் முரசம் வானொலி
வெள்ளிப் பூக்களை
பூத்து நிற்கின்றது ..
அதன் ஒலிக்கதிரில்
வானத்தின் வெள்ளிகளைக் கோர்த்து
மாலை சூடி வாழ்த்துவோம் !

தமிழீழப் போர்
கந்தகத் தீயில்
வெந்த போது
ஒலிக்கற்றையில் தீயேற்றி
“இனவெறியை”
வெளிச்சம் போட்டுக் காட்டி
முரசறைந்த போரொலியை
வாழ்ந்திடுவோம் !

புலத்தில் ஊன்றிய
தமிழீழ வித்துக்களின்
தமிழ் மரபைக் காக்க
இன உணர்வை ஊட்டிய
ஒலித்தாயை வாழ்த்துவோம் !
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின்
குழந்தை ..
வெள்ளிவிழா காண்கிறது !
தமிழர் பண்பாடி வாழ்த்துவோம் !

தாயாக வேரில்
புலத்தின்
பாலத்தை ஊன்றி
வழிசமைத்த
தமிழ் முரசம் வானொலியை
வாழ்ந்திடுவோம் !

கலையின் விழி திறந்து
தேச விடியலின்
உணர்வைக் காட்டி ..
சமுதாய விழிப்பூட்டிய
இனப்பற்றின்
தமிழ் முரசம் ஒலியே !
நின் தலையில்
அகர முடி சூடி
வாழ்த்துகின்றோம் !

தேசியக் குயில்களின்
குரலோசையில்
நேசம் கொண்டு
புலத்தின் இசைச் சோலையில்
புதுப் புது குயில்களை
பாட்டிசைக்க வழி சமைத்தீர் !
நின் நெறியை
பாமாலை சூடி வாழ்த்துகிறோம் !

தமிழீழ உணர்வலையை
தமிழ் முரசம் ஒலியலையால்
உலகெங்கும் இணைத்து
நவதளங்களில்
ஒலி .. ஒளி .. ஏற்றி
உருவேற்றும்
தமிழ் முரசம் வானொலியே !
நின்னை !
உவகை பொங்க வாழ்த்துகின்றோம் !

தமிழ் முரசம் வானொலியின்
ஆணிவேராய் ஊன்றி நிற்கும்
தேசப்பற்றாளர்களின்
உணர்வுக் கரங்களை
இறுக்கப் பற்றி
உச்சத்து வானின் விரிவின்
எல்லைவரை ஒலிக்க
வாழ்த்தொலிப்போம் !

தமிழீழம் நோக்கிய கரங்கள்
ஒன்றிணைவோம் !
தமிழீழ விடியலின்
தடைகள் தகர்ப்போம் !
வெள்ளி .. பொன்னாகும் ..
வைரங்கள் மேவும் ..
வைர நெஞ்சாகி
தமிழீழ விடியல் காண்போம் !.

” தேசப் பற்றின் வேரில் ஆழ்ந்தால்
தேச விடியலின் வழி பிறக்கும் “

தமிழ்முரசம் பிறந்தநாள் தலைவன் வழியில் நிமிர்ந்தநாள்! 4
தமிழ்முரசம் பிறந்தநாள் தலைவன் வழியில் நிமிர்ந்தநாள்! 5
5 2 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
1 கருத்து
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments
Metha
7 மாதங்களுக்கு முன்பு

Vanakkam