தமிழ் அரசியலில் தொடர்கிறது வைரஸ் தொற்று!

தமிழ் அரசியலில் தொடர்கிறது வைரஸ் தொற்று!

நாட்டில் பயங்கர வாதத்தை ஒழிப்பதற்கு மிகக் குறைந்த உயிரிழப்போடு எவ்வாறு சிறீலங்கா அரசாங்கம் திட்டமிட்டதோ அவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றையும் ஒழிக்க சிறீலங்கா அரசு திட்டமிடவேண்டுமென்று முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களின் கட்சியான தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
இதிலிருந்து புரிந்து கொள்ளுங்கள் தமிழ் மக்கள் கூட்டணி என்ன கொள்கையோடு சிறீலங்காவின் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகின்றது என்று உண்மையில் தமிழ்மக்களின் தியாகங்களையும் விடுதலைச்சிந்தனையும் அழிக்க துடிக்கும் கொரோனா வைரஸ் இவர்களை போன்றவர்கள்தான் என்பதை மக்கள் நன்கு புரிந்து கொள்ளவேண்டும். இப்படியான வைரசுகளை தமிழ் அரசியல் தளத்திலிருந்து  நீக்குவதற்கு தமிழ் மக்கள் தயாராக வேண்டும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பகிர்ந்துகொள்ள