தமிழ் ஆமி பிரிவு மூடல்:புதிதாக தமிழ் காவல்துறை!

தமிழ் ஆமி பிரிவு மூடல்:புதிதாக தமிழ் காவல்துறை!

வடக்கு மாகாணத்தில் இரண்டாயிரம் பேரை காவல்துறைக்குள் இணைக்குமாறு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
முன்னதாக தமிழ் இராணுவத்தை தோற்றுவிக்க கோட்டாபய ராஜபக்ச வடக்கில் முழு அளவில் முயற்சிகளை முன்னெடுத்த போதும் அது வெற்றி பெற்றிருக்கவில்லை

யாழில் முதல் கட்டமாக இணைத்துக்கொள்ளப்பட்ட ஆயிரம் பேரில் பெரும்பாலானோர் தப்பித்து ஓட நூற்றுக்குறைவானவர்களே தொடர்ந்தும் சேவையில் இணைந்துள்ளனர்.
இலங்கை இராணுவத்தில் தமிழ் இராணுவமென வெளி உலகிற்கு காண்பிக்க முற்பட்ட போதும் அவர்கள் படையினரது கூலிகளாக தச்சு மற்றும் மின்னிணைப்பு உள்ளிட்ட வேலைகளிற்கே இணைக்கப்பட்டிருந்தனர்.
இதேபோன்றே இலங்கை காவல்துறையிலும் தமிழர்களை இணைத்துக்கொள்ள ரணில்-மைத்திரி அரசு முயற்சிகளை மேற்கொண்டபோதும் அதுவும் தோல்வியிலேயே முடிந்திருந்தது.
இந்நிலையில் வடக்கில் வெறும் 200 தமிழ் காவல்துறையினர் மட்டுமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போதைய  இரண்டாயிரம் பேரை காவல்துறைக்குள் இணைக்கும் அறிவிப்பு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் விடுக்கப்பட்டுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments