தற்கொலை முயற்சிஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவரில் ஒருவர் பலி!

தற்கொலை முயற்சிஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவரில் ஒருவர் பலி!

திருகோணமலை, ஆனந்தபுரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் நஞ்சருந்தியதில் 16 வயது யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக, திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

நஞ்சருந்திய தாய் உட்பட 4 பேரையும் இன்று (06) முற்பகல் 9.20 மணியளவில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில், என். விதூசிகா (16) எனும் யுவதி உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

இதில் திருகோணமலை, ஆனந்தபுரி பகுதியைச் சேர்ந்த தாயார் (31) அவரது 12, 08 வயது மகள்கள் மற்றும் 02 வயது மகன் ஆகியோர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நஞ்சு அருந்துவதற்குரிய காரணம் எதுவும் தெரியவில்லை எனவும், பூசாரி ஒருவரின் குடும்பமே இவ்வாறு தற்கொலைக்கு முயன்றுள்ளதாக, ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் குறித்து  பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments