தலைமன்னாரில் சுய தனிமைப்படுத்தப்பட்ட வயோதிபர் மரணம்!

தலைமன்னாரில் சுய தனிமைப்படுத்தப்பட்ட வயோதிபர் மரணம்!

தலை மன்னார் பியர் பகுதியில் சுய தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 76 வயதுடைய முதியவர் ஒருவர் ஞாயிற்றுக் கிழமை காலை உயிரிழந்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்தார். 
 குறித்த நபர் கடந்த 23ஆம் திகதி கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் இருந்து பயணத்தை மேற்கொண்டு வந்த நிலையில் தலைமன்னார் பியர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் சுய தனிமைப் படுத்தப்பட்டார். இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக் கிழமை காலை குறித்த வயோதிபர் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தார் அறிவித்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.
 குறித்த வயோதிபரின் மரணம் தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறித்த சடலம் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் மேலும் தெரிவித்தார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments