தலைவருக்கு வாழ்த்துத்தெரிவித்த இளைஞர்கள் கைது !

You are currently viewing தலைவருக்கு வாழ்த்துத்தெரிவித்த இளைஞர்கள் கைது !

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு முகநூலில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்ததாக கூறி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஏறாவூர் பொலிசார் நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

நேற்றைய  தினம் முகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் மற்றும் புலிகளின் பாடல்கள்,சின்னங்களை பதிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் பலரை பொலிசார் தேடித் தேடி கைது செய்து வருகின்றனர்.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 19 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பகிர்ந்துகொள்ள