தவிசாளர் வாகனம் மீது தாக்குதல்- ஒருவர் கைது!

தவிசாளர் வாகனம் மீது தாக்குதல்- ஒருவர் கைது!

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்திரம் சுகிர்தன் பயணித்த அலுவலக வாகனம் மீதும் அதனைச் செலுத்திச் சென்ற சாரதி மீதும் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில், சந்தேகத்தின் பேரில், இளவாலை பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இளவாலை – வசந்தபுரம் பகுதியில், நேற்று (20) இரவு, தவிசாளர் பயணித்த வாகனத்தை, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வழிமறித்து, தாக்குதலை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இளவாலை – சேந்தாங்குளம் பகுதியில், வெள்ளநீர் வடிந்தோடு வாய்க்காலை வெட்டும் நடவடிக்கையை தவிசாளர் கண்காணித்துவிட்டு திரும்பிய வேளையிலேயே, இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இளவாலை பொலிஸார்முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில், இளவாலை – வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரை கைதுசெய்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள