தாண்டிக்குளத்தில் விபத்து- மூவர் காயம்!

தாண்டிக்குளத்தில் விபத்து- மூவர் காயம்!

வவுனியா – தாண்டிக்குளம் பகுதியில் இன்று (19) மதியம் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஓமந்தையில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த கென்டர் ரக வாகனம், தாண்டிக்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது வேககட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதியமையால் இந்த விபத்து இடம்பெற்றதாக,  வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சிக்கியுள்ளார் எனவும் அவர் உட்பட கென்டரிவ் பயணித்த இருவரும்  படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து  தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments