தாயின் இதயத்தை வெட்டி எடுத்த மகள்!

தாயின் இதயத்தை வெட்டி  எடுத்த மகள்!

தன் தாய் உயிருடன் இருக்கும்போதே, அவரது மார்பை வெட்டி அவரது இதயத்தை வெளியில் எடுத்துள்ளார் ஒரு இளம்பெண்.
Moldova நாட்டைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமான Anna Leikovic (21) என்ற இளம்பெண், தன் தாயான Praskovya Leikovic (40) என்பவரைக் கத்தியால் குத்தி, அவர் உயிருடன் இருக்கும்போதே, அவரது இதயம், நுரையீரல், குடல் முதலான உள்ளுறுப்புக்களை வெட்டி எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தாயின் உடலை கூறுபோட்டுவிட்டு, அமைதியாக ஒரு குளியலைப் போட்டுவிட்டு, தன் காதலனைக் காண சென்றுள்ளார் Anna.
கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட Anna, நீதிபதி வரும்போது, நீதிமன்றத்தில் உள்ள ஒரு பெஞ்சில் படுத்துக்கொண்டார்.
பின்னர் பெஞ்ச் மீது ஏறி நின்ற அவரிடம் பத்திரிகையாளர் ஒருவர் அவரது தாயைக் கொன்றதைக் குறித்து கேட்கும்போது, பயங்கரமாக சிரித்துவிட்டு, குட்பாய் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார் Anna. Anna, ஒரு மருத்துவக்கல்லூரி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது

பகிர்ந்துகொள்ள