தாயும் பிள்ளையும் தற்கொலை!!

You are currently viewing தாயும் பிள்ளையும் தற்கொலை!!

வவுனியா, பறண்நட்டகல் பகுதி கிணறு ஒன்றிலிருந்து தாயினதும் அவரது மூன்று வயது குழந்தையினதும் சடலங்களை நேற்று முன்தினம் (28) ஓமந்தை சிறீலங்கா காவல்துறையினர் மீட்டிருந்தனர்.
.
குறித்த இருவரும் கடந்த 27-ம் திகதி அவர்களது வீட்டில் இருந்துள்ளனர்.எனினும் இரவு 12 மணியவிளவில் காணாமல்போயிருந்த நிலையில் ஊர்மக்கள் மற்றும் உறவினர்கள் அவர்களை தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் 28-ம் திகதி காலை வீட்டுக்கு அருகில் இருந்த வயல் கிணறு ஒன்றிலிருந்து அவர்கள் இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 42 வயதான தாயும் அவரது மூன்று வயதான மகளும் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்
இந்நிலையில் குறித்த தாய், தனது குழந்தையுடன் வறுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள