தாய்லாந்தில் நிர்வாண நிலையில் சடலமாக கிடந்த சுவிஸ் பெண்: இளைஞர் கைது!

You are currently viewing தாய்லாந்தில் நிர்வாண நிலையில் சடலமாக கிடந்த சுவிஸ் பெண்: இளைஞர் கைது!

தாய்லாந்தில் சுற்றுலா சென்ற சுவிட்சர்லாந்து பெண் ஆடையின்றி இறந்து கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 27 அவரது இளைஞர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த Nicole Sauvain-Weisskopf எனும் 57 வயது பெண், கடந்த ஜூலை 13-ஆம் திகதி, தாய்லாந்தின் Phuket விமான நிலையத்தில் வந்து இறங்கியுள்ளார்.

சுமார் 14 நாட்களுக்குப்பின், கடந்த செவ்வாயன்று மதியம் 2 மணியளவில் அவர் கடற்கரையை நோக்கி சென்றதை கண்டதாக ஒருவர் தெரிவித்தார்.

ஆனால், இரு தினங்களுக்கு முன் அவர் Wichit என்ற இடத்தில் இடுப்புக்கு கீழே ஆடையின்றி, தார்பாய் ஒன்றினால் மூடப்பட்ட நிலையில் நீரோடை ஒன்றின் அருகே உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

அவரது கால்சட்டை, உள்ளாடை, ஷூக்கள் மற்றும் அவரது மொபைல் போன் ஆகியவை அவரது உடல் கிடந்த இடத்துக்கு சற்று தொலைவில் கண்டெடுக்கப்பட்டன. அவரிடமிருந்த பணம், மற்றும் சில பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

Nicole, வன்புணரப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிசார் தெரிவித்தனர். அத்துடன் அவர் இறந்து மூன்று நாட்களாகியிருக்கலாம் என்றும் காவல்த்துறையினர் கூறினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 27 வயது இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிக்கோல் சென்ற அதே நேரத்தில், அந்த நபர் கடந்துள்ளதை, சம்பவ இடத்துக்கு அருகே உள்ள ஒரு சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த நபரிடம் காவல்த்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments