தாய் உயிரிழப்பு! தாங்கிக் கொள்ள முடியாத மகன் தீயில் எரிந்து உயிர் மாய்ப்பு!!

தாய் உயிரிழப்பு! தாங்கிக் கொள்ள முடியாத மகன் தீயில் எரிந்து உயிர் மாய்ப்பு!!

தாய் இறந்த துயரம் தாங்காது மகன் தனக்கு தானே தீ மூட்டியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் பொலிகண்டி கிழக்கு வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த இராமநாதன் டிலக்சன் (வயது 14) என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 3 மாதத்திற்கு முன்னர் குறித்த சிறுவனின் தாயார் உயிரிழந்துள்ளார். தாயார் உயிரிழந்ததை தொடர்ந்து குறித்த மாணவன் மன விரக்தியில் இருந்துள்ளான்.

இந்நிலையில் கடந்த 29ம் திகதி வீட்டில் ஒருவரும் இல்லாத நிலையில் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். தீக்காயங்களுக்கு உள்ளான சிறுவன் உடனடியாக மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அன்றைய தினமே மாலை யாழ் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்.

பகிர்ந்துகொள்ள