திங்கட்கிழமை மாலை 19.00 மணிமுதல் ஞானலிங்கேச்சுரத்தில் வழிபாடு!

திங்கட்கிழமை மாலை 19.00 மணிமுதல் ஞானலிங்கேச்சுரத்தில் வழிபாடு!
  • 18 திங்கட்கிழமை மாலை 19.00 மணிமுதல் ஞானலிங்கேச்சுரத்தில் வழிபாடு நடைபெற்று 20.00 மணிமுதல் ஈமவணக்க நிகழ்வு, நினைவு வணக்கப்பாடலுடன் நடைபெறும்.

தமிழின அழிப்பின் நினைவினை ஏந்தி தமிழர் களறி ஆவணக்காப்பகம் மற்றும் நூலகம் திறந்துவைக்கப்பட்ட ஓராண்டு நிறைவு 19. 05. 2020 செவ்வாய்க்கிழமை ஆகும், அன்று தமிழர் களறி (Europaplatz 1B, 3008 Bern) 14.00 மணிமுதல் திறந்திருக்கும்.

கொறோனாப் பெருந்தொற்று நோய்காரணமாக ஆகக்கூடியது ஐயவர் ஒன்றாக அல்லது தனித்தனியாக முற்பதிவுசெய்து வருகையளித்து தமிழினவழிப்பில் மாண்ட அனைத்து உயிர்களுக்கும் வணக்கம் செலுத்த இத்தால் அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்ச2020 ஞானலிங்கேச்சுரத்தில் அனைத்து தெய்வங்களுக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சியே அருளமுதுதாகப் படைக்கப்படும். மறுநாள் 19. 05. 2020 செவ்வாய்க்கிழமை தமிழர் களறி நிறைவினையிட்டும் முள்ளிவாய்க்கால் கஞ்சி எமது இனத்தின் அல்லலை நினைவுகொள்வதுடன் உணர்வினைக் கடத்தும் ஊடகமாக வீடுகளிலும் அன்று கஞ்சியை உணவாகக்கொள்ள இத்தால் வேண்டுகின்றோம்.

தமிழர் களறி
031 302 09 56
078 697 70 25

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments