திடீரென மாறிய காலநிலை: சீனாவில் மாரத்தான் ஒட்டப் போட்டியில் பங்கேற்ற 21 பேர் உறைபனியில் சிக்கி பலி!

Default_featured_image

வட மேற்கு சீனாவின் கன்சூ மாகாணத்தில் பேயின் நகரில் உள்ள சுற்றுலா தலத்தில் நேற்று இடம்பெற்ற 100 கி.மீ. மலையோர மாரத்தான் ஓட்ட பந்தய போட்டியில் பங்கேற்ற 21 பேர் திடீரென மாறிய மோசமான காலநிலையால் உயிரிழந்தனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வரை 21 போரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று சனிக்கிழமை இரவு வரை 18 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. காணாமல் போன 3 பேரை தோடும் பணி இன்று காலை மீளவும் ஆரம்பமான நிலையில் அவா்கள் மூவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் 172 பேர் கலந்து கொண்டனர். இந்நிலையில், திடீரென கடும் உறைபனி ஏற்பட்டு வெப்பநிலை மோசமாகக் குறைந்ததால் போட்டியாளர்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டது. திடீரென மோசமான காலநிலையை சமாளிக்க முடியாது 21 பேர் உயிரிழந்தனர்.

மாரத்தான் ஓட்ட பந்தய போட்டியில் பங்கேற்றவர்களில் 151 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்த 5 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

இந்த அசம்பாவித்தை அடுத்து போட்டி நிறுத்தப்பட்டு தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments