திட்டமிடும் சீனா – இந்தியாவுக்கு சிக்கல்.?

You are currently viewing திட்டமிடும் சீனா – இந்தியாவுக்கு சிக்கல்.?

தைவானை தங்கள் நாட்டுடன் இணைக்கும் முயற்சியை சீன அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக சீனா அதன் ராணுவ பட்ஜெட்டை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. அதன்படி ராணுவ செலவுகளுக்கு, 2023-க்கான ஒதுக்கீட்டை 7.2 சதவீதம் அதிகரித்து 1.55 லட்சம் கோடி யுவான்களாக, சீன அரசு அதிகரித்துள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 18.38 லட்சம் கோடி ரூபாயாகும்.

இந்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகையைப் போல இது மூன்று மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அமெரிக்க ராணுவ பட்ஜெட் அளவில் இது மூன்றில் ஒரு பங்கு தான். சீனாவின் ராணுவ பட்ஜெட், 2021இல் 6.8 சதவீதமும், 2022இல் 7.1 சதவீதமும் அதிகரிக்கப்பட்டது.

2027இல் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. 2035க்குள் சீன ராணுவத்தை முற்றிலும் நவீனப்படுத்தும் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தைவானைக் கைபற்றி, சீனாவுடன் அதை இணைக்கப் போவதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் பலமுறை கூறியிருந்த நிலையில், ராணுவ செலவுகள் மற்றும் நவீனமயமாக்கும் போக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ராணுவத்துக்கு அதிகம் நிதி ஒதுக்கும் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் அமெரிக்காவும் இரண்டாம் இடத்தில் சீனாவும் உள்ளது. அமெரிக்கா 2023-ம்ஆண்டுக்கு 816 பில்லியன் டாலர் (ரூ.66.91 லட்சம் கோடி)ராணுவத்துக்கு நிதி ஒதுக்கியுள்ளது. இந்தியா 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ரூ.5.94 லட்சம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது.யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments