திருகோணமலையில் அணிவகுத்துள்ள போர்க்கப்பல்கள்!!

திருகோணமலையில் அணிவகுத்துள்ள போர்க்கப்பல்கள்!!

இந்தியா-இலங்கை  பேரினவாத கடற்படைகளுக்கு இடையே ‘ஸ்லிநெக்ஸ்-20’ என்ற பெயரில் இருதரப்பு கூட்டு பயிற்சி   தென் தமிழீழம் ,   திரிகோணமலைக்கு அப்பால், அக்டோபர் 19 ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.

இந்த பயிற்சியில்  பேரினவாத இலங்கை கடற்படை சார்பில் எஸ்எல்என் சயூரா என்ற ரோந்து கப்பலும், கஜபாகு என்ற பயிற்சி கப்பலும் பங்கேற்கவுள்ளன.

இது தவிர,பேரினவாத இந்திய போர்க் கப்பல்களில் இருக்கும் நவீன இலகு ரக ஹெலிகாப்டர்கள் மற்றும் சேத்தக் ரக ஹெலிகாப்டர்கள்,கடற்படையின் டோர்னியர் ரோந்து விமானம் ஆகியவையும் இந்த கூட்டு பயிற்சியில் பங்கேற்கின்றன.

பகிர்ந்துகொள்ள