திருகோணமலையில் கத்திக்குத்து பெண் பலி!

திருகோணமலையில் கத்திக்குத்து பெண்  பலி!

திருகோணமலை – ஹொரவப்பொத்தானையில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றிற்குள் வைத்து பெண்ணொருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று (26) மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக
ஹொரவபொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.

தனது கணவருடன் நிதி நிறுவனத்திற்கு சென்றிருந்த பெண்ணை ஒருவர் கத்தியால் குத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

3 பிள்ளைகளின் தாயான ஹொரவபொத்தானையை சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.​

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments