திருகோணமலையில் கொழும்பு NDB வங்கி ஊழியருக்கு கொரோனா!

திருகோணமலையில் கொழும்பு NDB வங்கி ஊழியருக்கு கொரோனா!

NDB வங்கியின் கொழும்பு மாவட்டக் கிளைக் காரியாலயம் ஒன்றில் பணியாற்றிவருகின்ற திருகோணமலையைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

நேற்று முன்தினம் திருகோணமலையில் நடைபெற்ற பீசீஆர் பரிசோதனையின் போது தானாக முன்வந்து தனக்கும் பரிசோதிக்குமாறு அவர் கோரியதன் அடிப்படையில் அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகிறது.

இந்நிலையில் இன்று வெளியாகிய முடிவுகளின் அடிப்படையில் அவர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது வரையில் அவரும் அவருடைய வீட்டாரும் அவர்களுடைய வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அருவியின் திருகோணமலை பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இன்று அவர் கொரோனா விசேட வைத்தியசாலை ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை குறித்த ஊழியர் கொழும்பில் பணியாற்றிவருவதால் அவர் பயணித்த போக்குவரத்து மார்க்கங்கள் மற்றும் திருகோணமலையில் அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுவருவதாகவும் அருவியின் செய்தியாளர் மேலும் தெரிவிக்கின்றார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments