இலங்கை விமானப் படையின் ஹெலிகொப்டர்கள் மூலம் மாவிலாறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இன்று மதியம் 2 மணி வரை 154 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
மாவிலாறு பகுதியில் சிக்கியிருந்த 121 பேரை விமானப்படை மீட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
திருகோணமலை மாவில் ஆறு அணைக்கட்டு உடைப்பையடுத்து ஏற்பட் வெள்ளத்தினால் பாதிக்ப்பட்ட சேருவல, சோமாபுர, மாவில் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட 55 பேரை இதுவரை விமானம் மூலம் மீட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த இடை முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு வெள்ளத்தில் இருந்து விமானம் ஊடாக மீட்கப்பட்டவர்களை சீனாபே விமான படைதளத்திற்கும் சேருவல மகாவலி விளையாட்டு மைதானத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அதேவேளை மேலும் 22 பேர் விமானம் மூலம் மீட்கப்பட்டு வருகின்றதுடன் கடல்வழி மற்றும் விமானம் மூலம் தொடர்ந்து மீட்கும் பணி இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.






