திருநங்கைகள் : எமர்தர்மன் வேடம் அணிந்து கொரோனா விழிப்புணர்வு!

You are currently viewing திருநங்கைகள் : எமர்தர்மன் வேடம் அணிந்து கொரோனா விழிப்புணர்வு!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் திருநங்கைகள், எமர்தர்மன் வேடம் அணிந்து கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் பின்னால் வைரஸ் வேடமணிந்தவர்கள் தொற்றிக் கொண்டு கழுத்தில் கயிறு போட்டு பிடிப்பது போலவும் நடித்தனர்.

பொள்ளாச்சியில் போலீசார் மற்றும் வருவாய்த்துறை சார்பில் கோவை சாலை காந்தி சிலை அருகில் திருநங்கைகள் எமதர்மன் மற்றும் கொரோனா வைரஸ் போல் வேடமணிந்து கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர்.

அப்போது எமதர்மன் வேடமணிந்த திருநங்கை கொரோனா தாக்கம் குறித்தும், பொதுமக்கள் தனித்து, விழித்து, வீட்டில் இருக்கும் படியும் வெளியில் வருவதை தவிர்க்க வலியுறுத்தியும், பொதுமக்கள் வெளியில் வந்தால் கொரோனா தொற்றிவிடும் என்பதை உணர்த்தும் வகையில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் பின்னால் வைரஸ் வேடமணிந்தவர்கள் தொற்றிக் கொண்டு கழுத்தில் கயிறு போட்டு பிடிப்பது போலவும் நடித்தனர்.

பகிர்ந்துகொள்ள