திருமலையில் உழவு இயந்திரம் தடம்புரண்டு ஒருவர் பலி !

You are currently viewing திருமலையில் உழவு இயந்திரம் தடம்புரண்டு ஒருவர் பலி !

திருகோணமலை மாவட்டம், சம்பூர் சிறீலங்கா காவற்துறை பிரிவுக்குட்பட்ட கொக்கட்டிப்பகுதியில் உழவு இயந்திரம் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இன்னுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது என்று சம்பூர் சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பூர் – கடற்கரைச்சேனைப் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிறிபால கஜன் (வயது 32) என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

வயல் உழவு வேலை செய்வதற்காகச் சாரதியும், உதவியாளரும் உழவு இயந்திரத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது உழவு இயந்திரமானது வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததாலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

இதேவேளை, உயிரிழந்தவரின் சடலம் மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்த நபர் அதே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் என்று சம்பூர் சிறீலங்கா காவற்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments