திரு. சுமந்திரன், திரு. சாணக்கியன் கலந்துகொண்ட சந்திப்பு இடைநிறுத்தம்!

You are currently viewing திரு. சுமந்திரன், திரு. சாணக்கியன் கலந்துகொண்ட சந்திப்பு இடைநிறுத்தம்!

கனடாவில் இன்று நடைபெற்ற, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. எம்.ஏ.சுமந்திரன், மற்றும் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர், திரு. சாணக்கியன் ஆகியோர் கலந்து கொண்டிருந்த பொதுக்கூட்டம், அங்கு ஏற்பட்ட குழப்ப நிலையால் இடை நிறுத்தப்பட்டது.

அமெரிக்க விஜயத்தை முடித்துக்கொண்டு கனடா வந்துள்ள மேற்படி இருவரும், எதிர்வரும் செவ்வாய் கனேடிய அரசுடனான சந்திப்பை மேற்கொள்ளவிருக்கும் நிலையில், கனடா வாழ் தமிழ்மக்களுக்கான பொதுக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. சந்திப்பு ஆரம்பமாவதற்கு முன்னதாகவே, மண்டபத்துக்கருகில் சலசலப்பு ஏற்படக்கூடிய நிலைகள் தென்பட்டாலும், சந்திப்பின் அமைப்பாளர்கள் நிலைமையை சமாளித்து சந்திப்பை தொடங்கியிருந்தனர்.

சந்திப்பில் திரு. சாணக்கியன் பேசி முடித்தபின், திரு. சுமந்திரன் பேசிக்கொண்டிருந்தபோது சந்திப்பில் கலந்து கொண்டிருந்தவர்களில் ஒரு பகுதியினர் அங்கு திரு. சுமந்திரனை மேற்கொண்டு பேசவிடாமல் இடமறித்தபோது அங்கு குழப்பநிலை ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கு வந்திருந்த கனேடிய காவல்துறையினர், மேற்கொண்டு சந்திப்பை நடத்துவது உசிதமல்ல என தெரிவித்ததையடுத்து, குறித்த சந்திப்பு இடைநிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments