திலீபன் உயர்வான ஒரு விடுதலைப் போராளி – ஐரிஷ் குடியரசு,தமிழரின் போராட்டத்துக்கு ஆதரவு !

திலீபன் உயர்வான ஒரு விடுதலைப் போராளி – ஐரிஷ் குடியரசு,தமிழரின் போராட்டத்துக்கு ஆதரவு !

ஐரிஷ் குடியரசுக் கட்சியின் ஷின்பெயின் அமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் டெஸ் டோல்டன் தமிழீழத்தின் சுயாட்சியை வலியுறுத்திய அரசியல் போராட்டத்துக்கு தமது அமைப்பின் ஆதரவு எப்போதும் இருக்கும் என உறுதிபடக் கூறியுள்ளார்.
திலீபன் உயர்வான ஒரு விடுதலைப் போராளி என்றும் அவர் தனது உரையில் புகழ்ச்சி தெரிவித்தார்.
நேற்று முன்தினம் லண்டனில் இடம்பெற்ற திலீபன் நினைவுதின நிகழ்வில் பங்குபற்றிப் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அவர் தமது உரையில் மேலும் குறிப்பிடுகையில்.

ஐரிஷ் போராட்டத்துக்கும் ஈழத்தமிழர் போராட்டத்துக்கும் நிறையவே ஒற்றுமை காணப்படுவதுடன் திலீபன் உண்ணாவிரதமிருந்து 1971ம் ஆண்டு உயிர் நீத்த ஐரிஷ் போராளி பொபி சான்டஸ் போன்ற ஒரு உயர்வான விடுதலைப் போராளி எனவும் வியந்து பேசியிருந்தார்.
கூடவே, ஈழத் தமிழரின் உரிமைப் போராட்டம் உயர்வானது. அந்தப் போராட்டத்துக்கு ஐரிஷ் குடியரசுக் கட்சியின் ஆதரவு எப்போதும் இருக்கும் எனவும் உறுதிபடக் குறிப்பிட்டார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments