துணிவிருந்தால் சர்வதேச விசாரணைக்கு வாருங்கள்! – கஜேந்திரன் சவால்!

துணிவிருந்தால் சர்வதேச விசாரணைக்கு வாருங்கள்! – கஜேந்திரன் சவால்!

ஜனாதிபதி என்பதனால் செய்த படுகொலைகளும், குற்றங்களும் மறைந்து விடாது. துணிச்சல் இருந்தால் சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு வாருங்கள் நிரூபித்து காட்டுகின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் பொருளாதாரத்தை அழித்து தென்னிலங்கையை சேர்ந்தவர்களின் பொருளாதாரத்தை மாத்திரம் நோக்கமாக கொண்டு செயற்படுவதை இந்த அரசு நிறுத்த வேண்டும்.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையானது அரசியல் நோக்கத்தை மாத்திரம் அடிப்படையாக கொண்டது.

அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்ட அமைப்புக்களோ அல்லது தனி நபர்களோ எந்தவொரு பயங்கரவாத செயற்பாடுகளுடனும் தொடர்புபட்டவர்கள் அல்ல.இருப்பின் அதனை வெளிப்படுத்துங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments