துணை நடிகர் தமிழகத்தில் வெட்டிக் கொலை!!

துணை நடிகர் தமிழகத்தில் வெட்டிக் கொலை!!

பிரபல தொலைக்காட்சியில் சின்னத்திரை தொடர் நாடக நடிகர் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘தேன்மொழி பி.ஏ. ஊராட்சி மன்றத் தலைவர்’ தொடரின் மூலம் அறிமுகமானார்.

இந்த தொடரில் துணை நடிகராக நடித்து வந்தவர் தான் சென்னை எம்.ஜி.ஆர் நகர் வள்ளல்பாரி தெருவில் வசித்து வரும் செல்வரத்தினம் (45) இலங்கை தமிழரான இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளன.

இவர் நடிப்பு மட்டுமின்றி ரியல் எஸ்டேட் உள்பட பல தொழிகள் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை 6.30.மணியளவில் எம்.ஜி.ஆர். நகர் அண்ணா பிரதான சாலை பகுதிக்கு முச்சக்கரவண்டியில் வந்த 4 பேர் வள்ளல் பாரி தெருவில் உள்ள செல்வரத்தினம் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டு வாசலிலே செல்வரத்தினத்தை அவர்கள் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் செல்வரெத்தினம் சம்பவ இடத்திலே ரத்த வெள்ளத்தில் மிதந்தவாரு உயிரிழந்தார். அந்த பிறகு கொலை செய்த கும்பல் அருகாமையில் இருந்த சிசிடிவி கேமராவை சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

அதனை தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற எம்ஜிஆர் நகர் காவல்த்துறையினர் உடலை மீட்டும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த கொலை தொழில் பிரச்னையால் அரங்கேறியதா அல்லது வேறு எதுவும் காரணமா என பல்வேறு கோணத்தில் காவல்த்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments