துயர் பகிர்வு
அமரர் பாக்கியம் பரம்சோதி
“பேரன்பின் உருவமாய் வாழ்ந்து, இயற்கையோடு கலந்தார்”
தோற்றம்: 05.09.1937
மறைவு: 26.06.2026
தாயகத்தில் செங்குந்தர் வீதி, கரவெட்டி கிழக்கு, கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், நோர்வேயில் நார்வீக், ஒஸ்லோவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி
பாக்கியம் பரம்சோதி அவர்கள் 26.06.2026 அன்று வெள்ளிக்கிழமை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் உற்றார், உறவினர், நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்ற பரம்சோதி அவர்களின் அன்பு மனைவியும்,
அமரர்கள் கந்தர், சின்னாச்சி அவர்களின் அன்பு மகளும், அமரர்கள் நடேசு, வள்ளிப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற செந்தூரன், மயூரன், மயுரி ஆகியோரின் பாசமிகு தாயாரும், விஜியேந்திராவின் அன்பு மாமியாரும், ஆரணி, ஆதவன் அருண் ருத் ஆகியோரின் அருமைப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வு எதிர்வரும் 06.07.2026 அன்று 0830-1130 மணி வரைAlfaset krematorium, Nedre Kalbakken 99, 1081 Oslo எனும் முகவரியில் நடைபெற இருக்கின்றது, இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றார்கள்.
அம்மாவின் ஆத்மா அமைதியாக துயில்கொள்ளட்டும்
தொடர்புகளுக்கு:
மகள்: 92406273






