துயர் பகிர்வு- இயக்குநர் கேசவராஜ்

You are currently viewing துயர் பகிர்வு- இயக்குநர் கேசவராஜ்

தேசியத் தலைவரின் பாராட்டைப் பெற்ற ஈழத்தின் மூத்த இயக்குனர் நவரட்ணம் கேசவராஜ் அவர்கள் காலமானார்.

இவர் 1986ம் ஆண்டு “தாயகமே தாகம்”, “மரணம் வாழ்வின் முடிவல்ல” போன்ற படங்களை இயக்கியமைக்காக தேசியத் தலைமையின் பாராட்டைப் பெற்றதுடன் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்குள்ளும் உள்வாங்கப்பட்டார்.

இவை தவிர பல வீதி நாடகங்கள் மேடை நாடகங்களை தயாரித்து வழங்கிய இவர் “பிஞ்சுமனம்”, “திசைகள் வெளிக்கும்”, கடற்புலிகளின் 10ஆண்டு நிறைவை முன்னிட்டு “கடலோரகாற்று”, “அம்மா நலமா?” போன்ற படங்களையும் இயக்கியுள்ளதுடன் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் வலியை உணர்த்தும் “அப்பா வருவார்” போன்ற பல குறும்படங்களையும் இயக்கியும் நடித்தும் உள்ளார்.

2009 இன் பின்னர் முன்னால் போராளிகள் பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக கொண்டு “பனைமரக்காடு திரைப்படத்தையும் இயக்கி வெளியிட்டார்,

இறுதி யுத்தம் வரை தமிழீழ மக்களுடன் பயணித்த இவர் சுவாசபுற்றுநோய் காரணமாக மரணமடைந்துள்ளார்.

ஈழத்து கலை இலக்கிய, திரைத் துறைக்கு இவரது இழப்பு இட்டு நிரப்ப முடியாத பேரிழப்பு ஆகும்!

பகிர்ந்துகொள்ள