துயர் பகிர்வு-தில்லைநாதன் ஆனந்தவர்ணன்

துயர் பகிர்வு-தில்லைநாதன் ஆனந்தவர்ணன்

பூநகரியின் முன்னைநாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் தில்லைநாதன் அவர்களின் மகன் ஆனந்தவர்ணன் (வயது 30) லண்டனில் இன்று 09.04.2020 வியாழக்கிழமை கொரோனா தொற்றிற்கு இலக்காகி சாவடைந்துள்ளார்.

பிரான்சில் குறுகிய காலத்திலேயே நிரந்தர பிரஜா உரிமைபெற்று, நோர்வேயில் வசித்து வந்துள்ள நிலையில் தற்போது அவசிய நிமித்தம் லண்டன் சென்ற நிலையிலேயே கொரோனா தொற்றிற்கு இலக்காகியுள்ளார். இவர் பூநகரி பிரதேச சபையின் முன்னை நாள் உறுப்பினர் , TTN தமிழ் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர், செய்தி வாசிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் என இவரது ஆளுமை அளப்பரியது.

தமிழ்த்தேசியத்தின் ஊடகப்பணியில் பணியாற்றிய தாய்மண்ணை நேசித்த இளைய ஊடகவியலாளரின் இழப்பில் துயருற்றிருக்கும் அனைவரோடும் தமிழ்முரசம் வானொலி பங்பெடுத்துக்கொள்கின்றது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments