துயிலுமில்லப்பாடல் பாடிய வர்ணராமேஸ்வரன் கொரோனாவினால் சாவடைந்துள்ளார்!

You are currently viewing துயிலுமில்லப்பாடல் பாடிய வர்ணராமேஸ்வரன் கொரோனாவினால் சாவடைந்துள்ளார்!

வர்ண இராமேஸ்வரன் ஈழத்துக் கலைஞர். ஈழத்து எழுச்சிப்பாடல்கள் பலவற்றைப் பாடியவர். மாவீரர் நாள் பாடலைப் பாடியவர். புலம் பெயர்ந்து தற்போது கனடாவில் வாழ்ந்துவந்தவர்.சுகையீனம் காரணமாக இன்று சாவடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம் அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் இராமேஸ்வரன். தந்தையார் கலாபூசணம் சங்கீதரத்தினம் முருகேசு வர்ணகுலசிங்கம் ஒரு சிறந்த இசைப் பாரம்பரியத்திலே தோன்றியவர். இவரது தந்தை வழிப்பேரனார் தாய் வழிப்பேரனாரும் இசை நாடகக் கலைஞர்கள். ஆரம்பக் கல்வியை அளவெட்டி சீனன்கோட்டை ஞானோதய வித்தியாசாலையிலும் பின்னர் உயர் கல்வியை தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியிலும் கற்றார். இராமேசுவரன் பண்ணிசை மூலமும் பின்னர் மிருதங்கம் வாசிப்பது மற்றும் ஆர்மோனியம் வாசிப்பதன் மூலமும் தந்தையின் பயிற்சியில் கருநாடக இசையைக் கற்றார். யாழ் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைப் பிரிவில் மாணவனாக இணைந்து கொண்டார். அதன் வாயிலாக நான்கு ஆண்டுகள் இசைக்கலைமணி என்னும் பல்கலைக்கழகப் பட்டத்தைப் பெற்று அங்கேயே தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக இசை விரிவுரையாளராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்பாடல்களுக்கூடாக எமது போராட்டத்திற்கு பலம் சேர்த்த ஈழத்துப்பாடகர் வர்ணராமேஸ்வரன் அவர்களுக்கு தமிழமுரசம் வானொலியின் புகழ்வணக்கத்தினை தெரிவித்துக்கொள்கின்றோம்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments