துருக்கியில் அதிகரிக்கும் இழப்பு: பலி எண்ணிக்கை 1,300 ஆக அதிகரிப்பு!

You are currently viewing துருக்கியில் அதிகரிக்கும் இழப்பு: பலி எண்ணிக்கை 1,300 ஆக அதிகரிப்பு!

துருக்கி மற்றும் சிரியாவில் இன்று அதிகாலை 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,300 பேர் உயிரிழந்ததுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் மற்றும் பல நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் இந்நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது.

துருக்கியில் சிரியாவின் எல்லை அருகில் 7.8 ரிக்டர் மற்றும் 6.7 ரிக்டர் உட்பட 4.7 ரிக்டர்களுக்கு மேற்பட்ட 10 பூகம்பங்கள் இன்று ஏற்பட்டன.

துருக்கி ஏற்பட்ட பூகம்பத்தின் அதிர்வுகள் சைப்பிரஸ் தீவு மற்றும் எகிப்திலும் உணரப்பட்டன.

துருக்கியில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் பூகம்பத்தினால் துருக்கியில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த காலங்களில் 1999 ஆம் ஆண்டு துருக்கியில் 7.4 அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 17,000 பேர் பலியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments