துருக்கி சுரங்கத்தில் வெடி விபத்து: 22 பேர் பலி – நூற்றுக்கணக்கானோர் பூமிக்கடியில் சிக்கி தவிப்பு!

You are currently viewing துருக்கி சுரங்கத்தில் வெடி விபத்து: 22 பேர் பலி – நூற்றுக்கணக்கானோர் பூமிக்கடியில் சிக்கி தவிப்பு!

துருக்கியின் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 22 பேர் வரை உயிரிழந்துள்ளனர் மற்றும் டஜன் கணக்கானோர் படுகாயமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு துருக்கியின் பார்டின் (Bartin) மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு விபத்தில் டஜன் கணக்கானோர் சுரங்கத்துக்குள் சிக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்பின் போது சுமார் 110 பேர் வரை சுரங்கத்தில் பணிபுரிந்து வந்ததாகவும், அதில் பலர் மேற்பரப்பில் இருந்து 300 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் இருந்தார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயங்கர வெடிப்பிற்கான காரணம் இன்னும் தெரியவில்லை, ஆனால் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 22 பேர் இறந்துள்ளனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் நிலத்தடியில் சிக்கியுள்ளனர்.

இந்நிலையில் மீட்புப் பணியாளர்கள் சுரங்கத்தின் பாறைகளை தோண்டி உயிர் பிழைத்தவர்களைச் சென்றடைய முயன்று வருவதாக துருக்கியின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக எட்டு சுரங்கத் தொழிலாளர்கள் சுரங்க வெடிப்பில் இருந்து தப்பிச் சென்றதாக மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

விபத்து தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டு இருக்கும் நிலையில், நிலக்கரி சுரங்கங்களில் வெடிக்கும் கலவையை உருவாக்கும் மீத்தேன், ஃபயர் டேம்பில் வெடித்ததற்கான ஆரம்ப அறிகுறிகள் இருப்பதாக துருக்கியின் எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து விபத்து ஏற்பட்ட சுரங்கத்தை துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் சனிக்கிழமை பார்வையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வெடிப்பு விபத்தில் இருந்து தப்பித்த நபர்களில் ஒருவர், தூசி மற்றும் புகை இருந்ததால் என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments