ஒஸ்லோ:
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனக்கு துரோகம் இழைதுள்ளதாக தன உணர்வதாக, உக்ரைன் ஜனாதிபதி ஷெலென்ஸ்கி கருத்து வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவை எதிர்பார்த்திருந்த உக்ரைனுக்கு, ரஷ்யா தொடர்பிலான ட்ரம்பின் அண்மைய அணுகுமுறைகள் புதிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக, ரஷ்யாவுடனான பொருளாதார உறவுகள், உக்ரைனுக்கு வழங்கப்படும் ஆதரவு மற்றும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆகியவை சர்ச்சைக்குள்ளாகியுள்ளன.
ரஷ்யா மீதான அழுத்தம் குறைந்தால், அது உக்ரைனின் பாதுகாப்பையும் பேச்சுவார்த்தை நிலைப்பாட்டையும் பாதிக்கலாம் என்பதே உக்ரைனின் முக்கியமான கவலை எனவும், போரை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிப்பதாக ட்ரம்ப் கூறிவருகிற நிலையில், அமெரிக்காவை உக்ரைன் தொடர்ந்து நம்ப முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
14.10.2026






