துரோகிகளையும் சந்தர்ப்ப வாதிகளையும் இனங்காண்போம்!!

துரோகிகளையும் சந்தர்ப்ப வாதிகளையும் இனங்காண்போம்!!

அன்பான தமிழீழ மக்களே!!

எமது போராட்ட வரலாற்றில் நாம் பெரிய இழப்புகளை சந்தித்திருக்கிறோம்.பெரிய இழப்புக்களுக்கு மத்தியிலும் எமது இலட்சியத்திற்கான போராட்டம் உறுதியாக தொடர்ந்தது.எமது போராட்டத்தில் எத்தகைய சவாலையும் சந்திக்கும் மனோதிடத்தைப் பெற்றுள்ளோம்.

எமது நாட்டை ஆக்கிரமித்த இந்தியப்படையை எமது மக்களின் ஆதரவாலும் வெளியேற்ற முடிந்தது.

இந்த மாபெரும் வெற்றியானது உலக அரங்கில் எமக்கு கௌரவத்தைப் பெற்றுத் தந்தது . இனிவரும் காலங்களிலும் இப்போது போல் நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்திருந்தால் எமது மண்ணை யாராலும் ஆக்கிரமிக்க முடியாது…

போராட்ட காலத்தில் தமிழீழத்தில் வாழ்ந்த மக்களை நான்கு பிரிவுக்குள் அடக்கலாம்.

  • தேச பக்தர்கள்
  • விடுதலை விரும்பிகள்
  • சந்தர்ப்பவாதிகள்
  • தேசத் துரோகிகள்

தேச பக்தர்கள்

     இவர்கள் நாம் இன்று கண்டுள்ள வளர்ச்சிக்கு எல்லா விதத்திலும் உதவியவர்கள். போராட்டத்தில் எமக்கு உதவுவதற்காக  உயிர்களை இழந்தார்கள்.சொத்துக்களை இழந்தனர்.உடல் ஊனமுற்றனர் .விதவைகள் ஆகினர்.சிறை சென்றனர் .அகதிகள் ஆகினர்.இவற்றுக்கு பின்பும்எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் போராட்டத்தில் நிற்கும் தேச பக்தர்கள் இவர்கள்..

விடுதலை விரும்பிகள்.

இவர்கள் எதிரிக்கி பயந்து .உயிரிழப்புக்குப் பயந்து  நேரடியாக எமக்கு உதவ முன்வராத போதும்  எதிரிக்கு துணைபோகாமல் எதிரியின் நடவடிக்கைகளை உளரீதியாக எதிர்ப்பவர்கள்.

சந்தர்ப்பவாதிகள்

எதிரிகளிடமிருந்தும் எம்மிடமிருந்தும் தங்கள் நலன்களைப் பெறுவதிலும் பேணிக்காப்பதிலும் கண்ணாக இருப்பார்கள்.

தேசத்துரோகிகள்

தமிழ்பேசும் மக்களில் மிக குறைந்த அளவினரே இவர்கள் .எதிரிக்கு முழுமையாக துணைபோய்  போராட்டத்தைக் காட்டிக்கொடுத்தவர்கள்.பல தேச பக்தர்களின் போராளிகளின் கொலைகளுக்கு இவர்கள் காரணமாக இருந்தார்கள் .எல்லாவற்றுக்கும் மேலாக எதிரியோடு சேர்ந்து எம்மக்கள் மீது போர் தொடுத்தார்கள்.

இன்று எமது  அரசியல் பிரிவை “விடுதலைப்புலிகள்  மக்கள் முன்னணி ” என்னும் பெயரில் ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்துள்ளோம்.

பரந்துபட்ட மக்கள் அமைப்பு ஒன்றை உருவாக்கி  எமது சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை முன்னெடுப்பது எமது கட்சியின் முக்கிய பணிகளில் ஒன்றாகும்.

அந்த மக்கள் அமைப்பை நாம் உறுவாக்கும்போது அந்த அமைப்புக்குள் பல துரோகிகளும் .சந்தர்ப்பவாதிகளும் இடம் பெற்றுவிடுகின்றனர் .இதைக்கண்டு போராட்டத்தோடு முழுமையாக நின்ற மக்கள் மனக்கசப்பும்,வெறுப்பும் அடைகிறார்கள் .

நாம தலைமறைவு வாழ்கையில் இருந்துஅண்மையில்தான் வெளிப்படையாக இயங்க ஆரம்பித்துள்ளோம் .எம்மால் முழுமையாகத் துரோகிகளையும் .சந்தர்ப்பவாதிகளையும் இனம்காண முடியாது 

அதற்குப் பல காரணங்கள் உண்டு .ஆனால் எமது மக்கள்  பூரணமாக ஒத்துழைத்தால் இவர்களை நாம்   இனங் கண்டு  கொள்ளாலாம் 

எமது தலைமறைவு வாழ்க்கையின் போதும்  நெருக்கடிகளின்போதும் .பல மக்களுடான தொடர்புகள் .உதவிகள் இரகசியமாகவே இருந்தன அவையும் போராளிகள் சிலருக்கே தெரிந்திருந்தது .அவர்களில் பலர் வீரசாவு அடைந்து விட்டார்கள் .

ஒரு குறிப்பிட்ட பகுதியில் இயங்கிய பலர் இயக்க வேலைகளுக்காக இன்று வேறு இடங்களுக்கு சென்று விட்டார்கள் .நீண்டகால அனுபவங்கள் ,தொடர்புகள் உள்ள போராளிகள் வீரச்சாவடைன்கின்றபோது நீண்ட அனுபங்களோடு பழைய தொடர்புகளும் துண்டித்துப் போகின்றன .இது தலைமறைவு கரந்தடி இயக்கத்தில் தவிர்க்க முடியாத ஒன்று . இதே நிலைதான் துரோகிகளையும் ,சந்தர்ப்பவாதிகளையும்  இனங்கானுவதிலும்  ஏற்படுகின்றது 

தமிழீழ –இந்தியப் போரில் குறுகிய காலத்துக்குள் நாம் பல அனுபவமிக்க மூத்த போராளிகளை இழந்துவிட்டோம் . போராட்டத்திற்கு முழுமையான உதவி  செய்துநின்ற தேசபக்தர்களுக்கும் ,மறைமுகமாக நின்ற விடுதலை விரும்பிகளுக்கும் இந்த துரோகிகளையும் ,சந்தர்ப்பவாதிகளையும்  முழுமையாக தெரியும் .அவர்களின் துரோகத் தனத்தால் ஏற்பட்ட முழு விளைவுகளையும் நீங்கள் நேரடியாகச் சந்தித்தவர்கள் .இவர்களை எமக்கு இனம் காட்ட வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உண்டு 

பல நிர்ப்பந்தம் காரணமாக எமக்கு உதவ முடியாமல் போனவர்களையும் எதிரியாக பார்க்காமல்  .ஒரு சில சமயங்களில் எதிரியுடன் காணப்பட்டவர்கள்  என்பதற்காக ‘துரோகி; என்று  ,முடிவும் எடுக்காமல் , துரோகிகளையும் ,சந்தர்ப்பவாதிகளையும்  சரியாகஇனம் காணுதல் முக்கியமானது .இதை உங்களால் செய்ய முடியும் .ஏனெனில் நீங்கள் அவர்களோடு நீண்ட காலமாக வாழ்ந்து வருபவர்கள் ..

இவர்கள் இனம் காணப்பட்டு அகற்றப்பட வேண்டியவர்கள் .இல்லையேல் நாம் அரும்பாடு பட்டு பல தியாகங்களுக்கு மத்தியில் கண்டுள்ள வளர்ச்சி இவர்களால்  அழிக்கப்படும்  இன்னொமொரு ஆக்கிரமிப்பாளனிடம் எமது மண் அடகு வைக்கபப்டும் .

எமது தேசிய சுயநிர்ணய உரிமைக்கான போராடத்தைப் பரந்துபட்ட அளவில் முன்னெடுக்கும்போது .அதற்கு எதிரானவர்களை நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து இனம் காணப்போகும் .இதற்கான முழுமையான ஒத்துழைப்பை நீங்கள் தருவீர்களென  எதிர்ப்பார்க்கிறோம் .

-விடுதலைப்புலிகள்இதழ் 

பகிர்ந்துகொள்ள