தென்னமாரட்சி போத்தல் கள் அவுஸ்ரேலியாவிற்கு ஏற்றுமதி!

தென்னமாரட்சி போத்தல் கள் அவுஸ்ரேலியாவிற்கு ஏற்றுமதி!

யாழ்.தென்மராட்சி பனை, தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் கொத்தணியினரால் உற்பத்தி செய்யப்பட்ட போத்தலில் அடைக்கப்பட்ட கள் அவுஸ்திரேலிய நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு கொத்தணி தலைவர் க. துரைசிங்கம் தலைமையில் வடிசாலையில் இடம்பெற்றது.

நிகழ்வில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிரிஷாந்த பத்திராஜ் மற்றும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பனைசார் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம் பனை சார் உற்பத்தியாளர்களிடம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தப்படவும் உள்ளது.

பகிர்ந்துகொள்ள