தென்னாபிரிக்காவில் கொவிட்-19 தொற்றினால் 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

You are currently viewing தென்னாபிரிக்காவில் கொவிட்-19 தொற்றினால் 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

தென்னாபிரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, தென்னாபிரிக்காவில் 60ஆயிரத்து 38பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 19ஆவது நாடாக விளங்கும் தென்னாபிரிக்காவில் இதுவரை 19இலட்சத்து 41ஆயிரத்து 119பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 12ஆயிரத்து 222பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 138பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு இலட்சத்து 57ஆயிரத்து 199பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 546பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 17இலட்சத்து 23ஆயிரத்து 882பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments