தென்னாபிரிக்காவுடனான பயணத் தடைகள் குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை!

You are currently viewing தென்னாபிரிக்காவுடனான பயணத் தடைகள் குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை!

ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபு கண்டறிந்த பின்னர் தென்னாப்பிரிக்காவுடனாக போக்குவரத்துக்கு சில நாடுகள் தடைகளை விதித்துள்ளமை ஏமாற்றமளிப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்தார்.

தடுப்பூசி போடுவதில் நாடுகளிடையே ஏற்றத்தாழ்வு நிலவும்போது கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைய வாய்ப்புள்ளது என்று பல தடவை கூறியுள்ளோம். இதை யாரும் தடுக்கவோ, கணிக்கவோ முடியாது. இந்நிலையிலேயே தற்போது கொரோனா ஒமிக்ரோனாக திரிபடைந்துள்ளது என ஜெனீவாவில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அதானோம் கெப்ரேயஸ் குறிப்பிட்டார்.

ஒமிக்ரோன் வைரஸை விரைவாக கண்டுபிடித்ததற்கு தென்ஆப்பிரிக்காவுக்கும், போட்ஸ்வானாவுக்கும் நன்றி கூற வேண்டும். மாறாக பயணத் தடைகளை விதிப்பதன் மூலம் அந்நாடுகளை மேலும் சிக்கலுக்குள் தள்ளக்கூடாது எனவும் அவா் வலியுறுத்தினார்.

இதேவேளை, தென்னாப்பிரிக்கா மீதான பயணத் தடைகள் பாரபட்சமானது என அவுஸ்திரேலியாவிற்கான தென்னாப்பிரிக்க தூதர் மார்டினஸ் வான் ஷால்க்விக் குற்றஞ்சாட்டியுள்ளார். ஐரோப்பாவில் ஒமிக்ரோன் திரிபு அடையாளம் காணப்பட்டிருந்தால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்காது எனவும் அவா் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஒமிக்ரோன் திரிபு பரவலால் தென்னாபிரிக்காவில் தொற்று நோயாளர் தொகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளபோதும் நாட்டின் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படவில்லை என தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபு கண்டறியப்பட்ட பின்னர் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதித்த நாடுகளையும் ஜனாதிபதி சிரில் ரமபோசா விமர்சித்தார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments