தெய்வீகப் பிறவிகள் தான் கரும்புலிகள் – தமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனையிலிருந்து …

You are currently viewing தெய்வீகப் பிறவிகள் தான் கரும்புலிகள் – தமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனையிலிருந்து …

கப்டன் மில்லலருடன் கரும்புலிகள் சகாப்தம் ஆரம்பமாகியது என்றுமே உலகம் கண்டிராத – எண்ணிப் பார்க்கவும் முடியாத -தியாகப் படையணி ஒன்று தமிழீழத்தில் உதயமாகியது


கரும்புலி வீரர்கள் பலர் இன்று பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் அநாமதேயமாக உறங்கிய போதும், அவர்களது அற்புதமான சாதனைகள் வரலாற்றுக் காவியங்களாக என்றும் அழியாப் புகழுடன் வாழும்

தெய்வீகப் பிறவிகள் தான் கரும்புலிகள் - தமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனையிலிருந்து ... 1

இது கரும்புலிகள் சகாப்தம். இடியும் மின்னலுமாகப் புலிகள் போர்க்கோலம் பூண்டுவிட்ட காலம். இந்தப் புதிய யுகத்தில் எமது போராட்டம் புதிய பரிமாணங்களில் விரியும். சாவுக்கு விலங்கிட்ட மறவர்கள் புதிய சரித்திரம் படைப்பார்கள். எமது சந்ததியின் விடிவுக்கு விளக்கேற்றி வைப்பார்கள்..

தெய்வீகப் பிறவிகள் தான் கரும்புலிகள் - தமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனையிலிருந்து ... 2

மற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காக தன்னை இல்லா தொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம். அந்தத் தெய்வீகப் பிறவிகள் தான் கரும்புலிகள்.

தெய்வீகப் பிறவிகள் தான் கரும்புலிகள் - தமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனையிலிருந்து ... 3

பலவீனமான எமது மக்களின் மிகவும் பலம்வாய்ந்த ஆயுதமாகவே, கரும்புலிகளை நான் உருவாக்கியுள்ளேன்.

தெய்வீகப் பிறவிகள் தான் கரும்புலிகள் - தமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனையிலிருந்து ... 4

கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புக் கவசங்கள் – எமது போராட்டப்பாதையின் தடைநீக்கிகள் – எதிரியின் படை பலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்.

தெய்வீகப் பிறவிகள் தான் கரும்புலிகள் - தமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனையிலிருந்து ... 5

கரும்புலி என்ற சொற்பதத்தில் கருமையை மனோதிடத்திற்கும், உறுதிப்பாட்டிற்குமே நாம் குறிப்பிடுகின்றோம். இன்னொரு அர்த்தபரிமாணத்தில் இருளையும் அது குறியீடு செய்யும் பார்வைக்குப் புலப்படாத, பூடகமான, இரகசியமான தன்மையையும் செயற்பாட்டையும் அது குறித்து நிற்கும். எனவே, கரும்புலி என்ற சொல் பல அர்த்தங்களைக் குறிக்கும் ஆழமான படிமமாக அமையப்பெற்றிருக்கின்றது

தெய்வீகப் பிறவிகள் தான் கரும்புலிகள் - தமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனையிலிருந்து ... 6

தமிழீழ ஆவணக்காப்பகம் 

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments