தெற்கில் பெண்ணுக்கு கொரோனா-60 பேருக்கு சுயதனிமை!

தெற்கில் பெண்ணுக்கு கொரோனா-60 பேருக்கு சுயதனிமை!

கம்பஹா, திவுவுலுப்பிட்டியவில் ​39 வயதான பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அப்பெண், கொழும்பு  ஐடிஎச் க்கு மாற்றப்பட்டுள்ளார் என அரசாங்கத் தகவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

காய்ச்சல் காரணமாக அந்தப் பெண், கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதனையடுத்தே, அப்பெண்ணுக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இ​தேவேளை, அந்த வைத்தியசாலையைச் ​சேர்ந்த பணியாளர்கள் 15 ​​பேர் மற்றும் அப்பெண் கடமையாற்றிய  நிறுவனத்தைச் சேர்ந்த 45 பேர் அடங்களாக 60 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments