தேசியத்தலைவரின் ஆட்சியில் அனைவருக்கும் ஒரே நீதி!

You are currently viewing தேசியத்தலைவரின் ஆட்சியில் அனைவருக்கும் ஒரே நீதி!

அனைவருக்கும் ஒரே நீதி

திருகோணமலை மாவட்டத்தில் எமது கட்டுப்பாட்டில் துவானா முதூர் பிரதேசத்தின் அமைந்த காட்டு பகுதியின் அமல எல்லைக் கிராமத்தைக் சேர்ந்த ஒரு சிங்களப் பெண்மணி வழிதவறி வந்து விட்டார். அப்போது அங்கு வைத்த அச்சிங்களப் பெண்மணிக்கு துப்பாக்கியைக் காட்டி மிரட்டி ஒரு தமிழ்வாலிபன் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார்.

இதனை அச்சிங்களப் பெண்மணி எமது இயக்கத்தின் முகாமிற்கு வந்து முறையிட்டுச் சென்றார். உடனே எமது இயக்கப் போராளிகள் அனைவரும் தேடுதலில் ஈடுபட்டு அந்த வாலிபனை இரகசியமாக ஆராய்ந்து தேடிக் கண்டுபிடித்து விட்டார்கள். அத்துடன் அச்சிங்களப் பெண்மணியும் அவனை அடையாளங்காட்டி விட்டார்.

அவ்வாலிபன் எமது இயக்கத்தினுடைய தீவிர ஆதரவாளனும் அங்கு பெருமளவான காட்டு பிரதேசங்களுக்கான வழிகாட்டியுமாவான். அவனை அச்சிங்களப் பெண்மணி அங்குள்ள தமிழ்ப் பெண்கள் சிலரின் உதவியுடன் அங்கு அமைந்துள்ள சிறிய வைத்தியசாலையில் ஒன்றிற்கு வைத்திய சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இச்செய்தியை முதலாம் பிரதேசப் பொறுப்பாளர் தேசியத் தலைவர் அவர்களுக்கு விவரமாக அறிவித்து என்ன செய்வதென்று கேட்டார். அதற்குடன் அச்சிங்களப் பெண்மணியைக் வல்லுறவுக்கு உட்படுத்திய வாலிபன், அச்சிங்களப் பெண்மணி முன்பு தமிழர்கள் வாழ்ந்த அதே கிராமத்தில் தமிழர்களை துரத்தியடித்து விட்டு குடியேற்றப்பட்டவர்கள். என்றும் அதே சிங்களக் குடியேற்றத்தைக் சேர்ந்த சிங்களவர்கள் எமது தமிழ்ப் பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்தியிருக்கின்றார்கள் என்றும் அதனால்தான் தான் அந்தச் சிங்களப் பெண்மணியை வல்லுறவுக்கு உட்படுத்தியாக நியாயப்படுத்தியும் தலைவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் அத்தமிழ் வாலிபன் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குச் செய்த பங்களிப்புக்களையும், அவன் இல்லாது விட்டால் அங்குள்ள பெரியதொரு காட்டுப் பிரதேசத்திற்கு வழிகாட்டி இல்லை என்பதையும் அந்தப் பொறுப்பாளர் அறிவித்திருந்தார்.

அதற்கு தேசியத் தலைவர் அவர்கள் உறுதியாக “அனைவருக்கும் ஒரே நீதிதான்” என்றும் அச்சிங்களப் பெண்மணியை அவ்வாறு செய்தக் கிராமத்திற்கு அனுப்புவதற்கு முன்பு அப்பெண் அறியும்படியாக அவனுக்கு மரண தண்டனை வழங்கும் படியும் அதன் பின்பு அப்பெண்ணை பாதுகாப்பாக சொந்தக் கிராமத்திற்கு அனுப்பும்படியும் அறிவித்திருந்தார்.

மறு நாள் தண்டனை நிறைவேற்றப்பட்ட விடயமும், சிங்களப் பெண் பாதுகாப்பாக அவ்வாறு கிராமத்திற்குத் அனுப்பி வைக்கப்பட்ட விடயமும் பிரதேசப் பொறுப்பாளரால் தேசியத் தலைவர் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைப் படித்த தேசியத் தலைவர் அவர்கள் அங்கிருந்த தளபதிகளுக்குக் காட்டிவிட்டு, “அனைவருக்கும் ஒரே நீதிதான்” என்று உறுதியாகக் கூறினார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply