தேசியப்பட்டியல் ஊடாக மக்கள் முன்னணிக்கு 2 ஆவது ஆசனம்!!

தேசியப்பட்டியல் ஊடாக மக்கள் முன்னணிக்கு 2 ஆவது ஆசனம்!!

நடந்து முடிந்த சிறிலங்கா நாடாளுமன்ற தேர்தலில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசிய  மக்கள் முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குவீதத்தின் அடிப்படையில் அக்கட்சிக்கு தேசியப்பட்டியலில் ஒரு ஆசனம் கிடைக்கப்பெற்றிருக்கிறது.

55 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று அக்கட்சி ஏற்கனவே ஒரு ஆசனத்தை  கைப்பற்றி இருந்த நிலையில் தேசியப்பட்டியலில் கிடைக்கப் பெற்ற ஆசனத்துடன்  முன்னணியின் ஆசன எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.

இதன் அடிப்படையில் தமிழ்த்தேசியத்திற்காக நெறி தவறாது குரல்கொடுப்பதோடு மட்டுமல்லாமல் மக்களோடு மக்களாக போராடிவருகின்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், செயலாளர் இருவரும் சிறீலங்கா பாராளுமன்றம் செல்கின்றனர் இதற்கு அப்பால் சர்வதேசத்தில் எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராக மக்கள் ஆணையோடு போராடும் அத்திவாரம் போடப்பட்டுள்ளது என்பதுதான் பிரதானமாகின்றது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments