தேராவில் கிராமத்தில் குடும்ப பெண்ணின் வீடு தீயில் எரிந்துநாசம்!

தேராவில் கிராமத்தில் குடும்ப பெண்ணின் வீடு தீயில் எரிந்துநாசம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேராவில் பகுதியில் 4 பிள்ளைகளைக்கொண்ட குடும்ப பெண் ஒருவரின் தற்காலிகவீடு தீவிபத்தின்போது எரிந்து சாம்பலாகியுள்ளது. போரில் கணவனை இழந்த நிலையில் நான்கு விள்ளைகளுடன் வாழ்ந்து வந்த குடும்பம் ஒன்றின் தற்காலிக வீட்டில் நேற்று(03) இரவு இடம்பெற்ற தீவிபத்தின் போது வீடு முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.
இதன்போது வீட்டில் இருந்த உணவுப்பொருட்கள்,ஆடைகள்,பாடாசலை மாணவர்களின் புத்தகங்கள்,ஆவணங்கள், தையல்மிசின் உள்ளிட்டவை அனைத்தும் எரிந்துள்ளன.
காணவனை இழந்த நிலையில் கூலித்தொழில் செய்தே தனது நான்கு பிள்ளைகளையும் வளர்த்து வரும் இந்த குடும்பத்திற்கு நிதந்தரவீடு கட்டிக்கொடுக்கப்பட்ட போதும் முழுமை பெறாதநிலையில் தற்காலிக வீட்டிலே இவர்கள் வாழ்ந்துவந்துள்ளார்கள்.
தீவிபத்து தொடர்பில் கிராம அலுவலகர் மற்றும் கிராம பொது அமைப்புக்கள் விபரங்களை திரட்டிவருவதுடன் இந்த குடும்பத்திற்கு முதற்கட்ட உணவு உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்துவருகின்றார்கள்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments