தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் வெளியிட்ட முக்கிய தகவல்!!

தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் வெளியிட்ட முக்கிய தகவல்!!

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனின் தேர்வாளர் வாக்குகள் 264கவும், குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்பின் தேர்வாளர் வாக்குகள் 214கவும் உள்ளது.

இதன் மூலம் ஜோ பைடன் வெற்றியை நெருங்குவது தெரிகிறது.

இதனிடையில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி ட்ரம்ப் சார்பில் வழக்கு போடப்பட்டுள்ளது.

தமது மேற்பார்வையில் வாக்கு எண்ணிக்கையை நடத்த ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சூழலில் தமிழ் வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ் டுவிட்டரில், ஜோ பைடனும் நானும் தெளிவாக உள்ளோம், அதாவது ஒவ்வொரு வாக்குகளும் எண்ணப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

ஜோ பைடன் அளித்துள்ள பேட்டியில், அதிகாரத்தை நாம் வற்புறுத்தி எடுத்து கொள்ள முடியாது, அது மக்களிடம் இருந்து வர வேண்டும்.

அவர்கள் தான் அமெரிக்காவின் அதிபர் யார் என்பதை முடிவு செய்ய வேண்டும்.

அதன்படி நீண்ட வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு, தேவையான் அளவு மாகாணங்களில் நாம் வெற்றி பெறுகிறோம்.

நாம் வெற்றி பெற்றுவிட்டோம் என நான் கூறவில்லை, ஆனால் மொத்த வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் நாம் தான் வெற்றி பெறுவோம் என கூறி கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments