தேவிபுரம் பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பலி!

தேவிபுரம் பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பலி!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட தேவிபுரம் பகுதியில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன்  கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது

இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன்  வள்ளிபுனம் மகாவித்தியாலய பாடசாலையில் கல்வி கற்கும் தேவிபுரம் (அ) பகுதியை சேந்த 11 வயதுடைய வடிவேல் வினுஐன் என்ற சிறுவன் ஆவான்

இன்று வீட்டில் உணவை அருந்திவிட்டு விளையாடிக்கொண்ட சிறுவனை காணவில்லை என உறவினர்களின் உதவியோடு தேடியபோது கிணற்றுக்குள் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அவரை உறவினர்களின் உதவியோடு மீட்டு புதுக்குடியிப்பு வைத்தியசாலைக்கு எடுத்து சென்றபோது   அச்சிறுவன் இறந்திருப்பது தெரியவந்துள்ளது

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments