தொடரும் கொரோனா பலியெடுப்பு: 13 நாட்களில் 726 பேர் உயிரிழப்பு!

You are currently viewing தொடரும் கொரோனா பலியெடுப்பு: 13 நாட்களில் 726 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக ஏற்படும் மரணங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில் கடந்த 13 நாடக்ளில் மட்டும் 726 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தனவின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டு வரும் நாளாந்த கொவிட்-19 மரணங்கள் தொடர்பான தகவல்களின் அடிப்படையில் இவ்வாறு 726 பேர் கடந்த 13 நாட்களில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

கடந்த 12ஆம் திகதி முதல் உடனுக்குடன் கொவிட்-19 மரணங்கள் தொடர்பான எண்ணிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.

அந்தவகையில் கடந்த ஜூன்-12 ஆம் திகதி முதல் ஜூன்-24 வரையான 13 நாட்களில் வெளியிடப்பட்ட கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 726 ஆக உள்ளது.

குறித்த 13 நாடக்ளில் ஜூன்-20 ஆம் திகதி 71 பேர் உயிரிழந்திருந்ததாக ஜூன்-21 அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் அதிகளவானா கொவிட்-19 மரணங்கள் பதிவாகிய நாளாக ஜூன்-20 ஆம் திகதி அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜூன் – 12 ஆம் திகதி – 67 பேர்

ஜூன் – 13 ஆம் திகதி – 57 பேர்

ஜூன் – 14 ஆம் திகதி – 55 பேர்

ஜூன் – 15 ஆம் திகதி – 59 பேர்

ஜூன் – 16 ஆம் திகதி – 51 பேர்

ஜூன் – 17 ஆம் திகதி – 55 பேர்

ஜூன் – 18 ஆம் திகதி – 54 பேர்

ஜூன் – 19 ஆம் திகதி – 47 பேர்

ஜூன் – 20 ஆம் திகதி – 52 பேர்

ஜூன் – 21 ஆம் திகதி – 71 பேர்

ஜூன் – 22 ஆம் திகதி – 65 பேர்

ஜூன் – 23 ஆம் திகதி – 45 பேர்

ஜூன் – 24 ஆம் திகதி – 48 பேர்

இவ்வாறு கடந்த 13 நாட்களில் 726 கொவிட்-19 மரணங்கள் நிகழ்ந்துள்ளதன் மூலம் இதுவரை இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 2,862 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

யாழ். குடாநாட்டில் கடந்த 5 நாட்களில் மட்டும் மேலும் 10 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஜூன்-20 ஆம் திகதி முதல் ஜூன்-24 வரையான 5 நாடகளில் இவ்வாறு 10 பேர் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து இதுவரையான நாட்களில் யாழ். குடாநாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் யாழ். குடாநாட்டில் கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து வரும் நிலையில் கடந்த 24 நாட்களில் மட்டும் 35 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1977 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜூன்-01 ஆம் திகதி முதல் ஜூன்-24 வரையான நாட்களல் இவ்வாறு கொரோனாத் தொற்று காரணமாக 35 பேர் உயிரிழந்துள்ளடன் மேலும் 1977 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றுறுதியானோர் விபரம்

ஜூன் – 01 – 122 பேர்

ஜூன் – 02 – 108 பேர்

ஜூன் – 03 – 123 பேர்

ஜூன் – 04 – 74 பேர்

ஜூன் – 05 – 59 பேர்

ஜூன் – 06 – 92 பேர்

ஜூன் – 07 – 96 பேர்

ஜூன் – 08 – 89 பேர்

ஜூன் – 09 – 64 பேர்

ஜூன் – 10 – 137 பேர்

ஜூன் – 11 – 117 பேர்

ஜூன் – 12 – 36 பேர்

ஜூன் – 13 – 90 பேர்

ஜூன் – 14 – 23 பேர்

ஜூன் – 15 – 41 பேர்

ஜூன் – 16 – 171 பேர்

ஜூன் – 17 – 121 பேர்

ஜூன் – 18 – 83 பேர்

ஜூன் – 19 – 64 பேர்

ஜூன் – 20 – 60 பேர்

ஜூன் – 21 – 30 பேர்

ஜூன் – 22 – 46 பேர்

ஜூன் – 23 – 79 பேர்

ஜூன் – 24 – 52 பேர்

உயிரிழப்பு விபரம்

ஜூன் – 01 – 03 பேர்

ஜூன் – 02 – 02 பேர்

ஜூன் – 03 – ஒருவர்

ஜூன் – 04 – 02 பேர்

ஜூன் – 07 – 02 பேர்

ஜூன் – 08 – ஒருவர்

ஜூன் – 09 – ஒருவர்

ஜூன் – 10 – ஒருவர்

ஜூன் – 12 – ஒருவர்

ஜூன் – 12 – 02 பேர்

ஜூன் – 14 – 02 பேர்

ஜூன் – 16 – 03 பேர்

ஜூன் – 17 – 02 பேர்

ஜூன் – 18 – 02 பேர்

ஜூன் – 20 – ஒருவர்

ஜூன் – 21 – 03 பேர்

ஜூன் – 22 – 03 பேர்

ஜூன் – 23 – ஒருவர்

ஜூன் – 24 – 02 பேர்

ஜூன்-24 வரையான காலத்தில் யாழ். மாவட்டத்தில் 4999 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று ஜூன்-24 வரையான காலத்தில் யாழ். மாவட்டத்தில் 75 பேர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மொத்த உயிரிழப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு வாரியாக

யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் – 20 பேர்

கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் – 11 பேர்

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் – 09 பேர்

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் – 08 பேர்

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் – 06 பேர்

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் – 05 பேர்

சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் – 04 பேர்

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் – 03 பேர்

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் – 03 பேர்

தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் – 03 பேர்

ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் – ஒருவர்

காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் – ஒருவர்

வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் – ஒருவர்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments