இந்தியா உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இன்று பெரும் விமான விபத்து தவிர்க்கப்பட்டதாக தற்போது செய்திகள் வெளியாகி உள்ளன.
சவூதி அரேபியாவில் இருந்து சவூதி அரேபியா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் ஹஜ் பயணிகள் உட்பட 250 பேர் பயணித்த விமானம் லக்னோ விமான நிலையத்தை இன்று வந்தடைந்தது.
இந்த விமானம் தரை இறங்கும் போது திடீரென சக்கரங்களில் தீப்பொறி பறந்தது. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
ஆனால் விமானி, கவனமாக செயல்பட்டு விமானத்தை பாதுகாப்பாக தரை இறக்கினார். இதனால் விமானத்தில் பயணம் செய்த 250 பேரும் உயிர் தப்பியதாக தெரியவந்துள்ளது.
இதேபோன்று
360 பயணிகளுடன் லண்டனில் இருந்து சென்னை புறப்பட்ட விமானத்தில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்திற்கு சொந்தமான விமானமே இவ்வாறு நேற்றிரவு (15.06.2025) தரையிறக்கப்பட்டுள்ளது.
நடுவானில் பறந்த போது இயந்திர கோளாறு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவசரமாக மீண்டும் லண்டனில் விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சென்னை மற்றும் லண்டனில், 700க்கும் மேற்பட்ட பயணிகள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
அண்மையில் இந்தியாவின் அகமதாபாத் விமான விபத்தின் பின்னர் விமான பயணங்களில் ஈடுபடுவோர் அச்ச நிலையில் உள்ளனர்.
இவ்வாறான நிலையில் குறித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.