தொண்டைமானாறு – மாமுனை வரையான கடற்பகுதியில் தேடுதல் நடவடிக்கையின் போது 109 கிலோ கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது!

You are currently viewing தொண்டைமானாறு – மாமுனை வரையான கடற்பகுதியில் தேடுதல் நடவடிக்கையின் போது 109 கிலோ கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது!

சட்டவிரோத கடல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் வடக்கு கடற் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட கடல் ரோந்து நடவடிக்கையின் போது 3.2 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் வடமராட்சி – தொண்டைமானாறு பிரதேசத்திலிருந்து வடமராட்சி கிழக்கு – மாமுனை வரையான கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 109 கிலோ 150 கிராம் கேரளா கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்படட்டுள்ளனர்.

கடற்படைக்கு சொந்தமான P-177 கடலோர பாதுகாப்பு கப்பல் மூலம் தொண்டைமானாறு முதல் மாமுனை கடற்கரையில் நேற்றையதினம் (31) இரவு மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது குறித்த இரண்டு சந்தேகநபர்கள், 2 பொதிகளில் அடைக்கப்பட்ட கஞ்சா மற்றும் டிங்கி படகு ஆகியவற்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த பகுதியில் P015 கடலோர பாதுகாப்பு ரோந்துப் படையினர் நடாத்திய மேலதிக தேடுதல் நடவடிக்கையின் போது, ​​அப்பகுதியில் கடலில் மிதந்த நிலையில் காணப்பட்ட கேரளா கஞ்சா பொதியும் மீட்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மொத்தமாக 109 கிலோகிராம் மற்றும் 150 கிலோகிராம் கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த நடவடிக்கையில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி ரூ. 32 மில்லியனுக்கும் அதிகமென தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், வடமராட்சி – பருத்தித்துறை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களான 26 மற்றும் 28 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் கைப்பற்றிய பொருட்களையம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக, பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையினை கடற்படையினர் மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments