தொற்றாளர்களால் நிரம்பியுள்ள ராகம வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் திடீர் விஜயம்!

You are currently viewing தொற்றாளர்களால் நிரம்பியுள்ள ராகம வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் திடீர் விஜயம்!

கொழும்பு புறநகர் பகுதியில் உள்ள ராகம போதனா வைத்தியசாலையின் கொவிட் சிகிச்சை விடுதிகள் தொற்று நோயாளர்கள் நிரம்பி, நோயாளர்கள் நடைபாதைகளில் தங்கவைக்கப்பட்டிருந்தது தொடர்பான காணொளிகள் நேற்று சமூக ஊடகங்களில் மிக வேகமாகப் பரவிய நிலையில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சி நேற்று மாலை அந்த வைத்தியசாலைக்கு திடீர் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார்.

அங்கு வைத்தியசாலைப் பணிப்பாளர் மற்றும் பணியாளர்களைச் சந்தித்து அமைச்சர் பேசினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார அமைச்சர், ராகம வைத்தியசாலையில் கொவிட் தொற்று நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்க மேலதிக விடுதிகளை ஒதுக்க சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளதாகக் கூறினார்.

இதேவேளை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கொரோனா தொற்று நோயாளர் தொகை அதிகரித்து வருவதால் அவர்களைச் சமாளிக்க சிரமம் ஏற்படுவதாக ராகம போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சம்பத் லியனகே ரணவீர தெரிவித்தார்.

வைத்தியசாலையில் கொவிட் 19 சிகிச்சை மையத்தின் படுக்கைகளை அதிகரிக்க வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவா் கூறினார்.

கொவிட் நோயாளிகளுக்கான மற்றொரு 28 படுக்கைகள் கொண்ட விடுதி இந்த வாரம் திறக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களும் தற்போது மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவதாகவும், வைத்தியசாலையில் பணியாற்றும் இரண்டு பணியாளர்கள் மற்றும் 10 தாதியர்கள் கொவிட் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments