தொலைபேசி வெடித்ததில் பார்வை பறிபோயுள்ளது!!

தொலைபேசி வெடித்ததில் பார்வை பறிபோயுள்ளது!!

தொலைபேசியை சார்ஜ் போட்டுக் கொண்டே பேசியதால், தொலைபேசி வெடித்ததில் 9 வயது சிறுவன் ஒருவன் தனது பார்வையை இழந்துள்ளார்.

இந்தியாவின் தமிழ்நாட்டில் மதுராந்தகத்தைச் சேர்ந்த எட்டப்பன் எனும் கூலித்தொழிலாளியின் மகனான தனுஸ் எனும் சிறுவனுக்கே தொலைபேசி வெடித்ததில் பார்வை பறிபோயுள்ளது. சார்ஜ் போட்டுக் கொண்டே தொலபேசியை பாவித்ததால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுவன் செங்கல்பட்டு கண் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருவதாகவும், முதல்கட்ட அறுவை சிகிச்சையில் குறித்த சிறுவனின் கண்ணிலிருந்த தொலைபேசியின் உடைந்த சிறு உதிரிப்பாகங்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன

பகிர்ந்துகொள்ள