நடிகர் சூர்யா செய்துள்ள மற்றுமொரு மனிதாபிமானபேருதவி!

You are currently viewing நடிகர் சூர்யா செய்துள்ள மற்றுமொரு மனிதாபிமானபேருதவி!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் 2டி என்ற நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ போன்ற படைப்புகள் சமூகத்தில் நேர் நிலையான அதிர்வுகளை ஏற்படுத்தியது. படைப்புகளுடன் மட்டும் நில்லாமல் சமூக நல பணிகளுக்காகவும், மக்கள் நல திட்டங்களுக்காகவும் சூர்யாவின் 2டி நிறுவனம் சார்பில் நிதியுதவிகளும், பொருளுதவிகளும் நன்கொடையாக அளித்து வருகிறது.
2டி நிறுவனம் சார்பில் வாகனம் வழங்கிய சிவகுமார் அந்த வகையில் கானாத்தூர் ரெட்டி குப்பம் பகுதியில் தூய்மை பணிகளுக்காக வாகனம் ஒன்று வேண்டும் என அந்த ஊராட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்று, தூய்மை பணிகளுக்கான நவீன வாகனத்தை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் நன்கொடையாக அளித்துள்ளது. இந்த வாகனத்தை நடிகர் சூர்யா சார்பாக அவரது தந்தை நடிகர் சிவக்குமார், கானத்தூர் ரெட்டி குப்பம் ஊராட்சி மன்ற தலைவரான திருமதி.வள்ளி எட்டியப்பனிடம் வழங்கினார்.
நடிகர் சூர்யா, திரையுலக நலன், மாணவ மாணவிகளின் கல்விச் செலவு மட்டுமல்லாமல், மக்கள் நலனுக்காகவும் இயன்ற அளவில் உதவிகளை தொடர்ச்சியாக செய்து வருகிறார். இவரது சமூக சேவையை திரையுலகினரும் சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments