நடிகர் விஜயின் தாயும் விலகல்!

நடிகர் விஜயின் தாயும் விலகல்!

விஜய்யின் தந்தையும் இயக்குனருமாகிய எஸ்.ஏ.சந்திரசேகர் ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் நேற்று புதிய அரசியல் கட்சி தொடங்கினார். இந்த கட்சிக்கு பொதுச்செயலாளராக எஸ்.ஏ. சந்திரசேகர், தலைவராக பத்மநாபன், பொருளாளராக ஷோபா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கட்சி பெயரை தேர்தல் ஆணையாளர் பதிவு செய்தார்.

இதையடுத்து நடிகர் விஜய்யே இந்த கட்சியை தொடங்கி இருப்பதாக பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் விஜய்யின் செய்தி தொடர்பாளர் இதனை மறுத்தார்.

இதற்கிடையே இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது பெயரில் கட்சி தொடங்கியதற்கு நடிகர் விஜய் எதிர்ப்பு அறிக்கை வெளியிட்டார். மேலும் அந்த கட்சியில் ரசிகர்கள் சேர வேண்டாம் என்றும் நடிகர் விஜய் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் எஸ். ஏ சந்திரசேகர் தொடங்கிய கட்சியில் பொருளாளராக நான் இல்லை, விலகிவிட்டேன் என்று நடிகர் விஜயின் தாய் ஷோபா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்

எஸ். ஏ சந்திரசேகர் தொடங்கிய கட்சியில் பொருளாளராக நான் இல்லை, விலகிவிட்டேன். அரசியல் பேச வேண்டாம் என பலமுறை கூறியும் எஸ். ஏ சந்திரசேகர் கேட்காததால் அவரிடம் விஜய் பேசுவதில்லை. சங்கம் தொடங்குவதாகவே என்னிடம் 

கையெழுத்து பெற்றார் எஸ்.ஏ.சி.

கட்சி தொடங்குவதற்காக 2 வது முறை கையெழுத்து கேட்டபோது நான் போடவில்லை. அரசியல் பற்றிப் பேச வேண்டாம் என எஸ்.ஏ.சி. இடம் விஜய் கூறியிருந்தார். எதிர்காலத்தில் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து விஜய்தான் முடிவெடுக்க வேண்டும்.

இவ்வாறு நடிகர் விஜயின் தாய் ஷோபாவி கூறினார்.

3 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments